நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடி கம்பம் அமைப்பு

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடி கம்பம் அமைப்பு
x

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடி கம்பம் அமைக்கப்பட்டது.

கன்னியாகுமரி

நாகா்கோவில்:

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடி கம்பம் அமைக்கப்பட்டது.

நாட்டின் சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நாடு முழுவதும் வீடுகளில் தேசிய கொடி ஏற்றும்படி பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

இந்தநிலையில் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய கொடி கம்பம் அமைக்கும் பணி நேற்று நடந்தது. ரூ.7 லட்சம் மதிப்பில் 12 மீட்டர் உயரத்தில், மோட்டார் மூலம் தேசிய கொடியை ஏற்றும் வகையில் நவீன முறையில் இந்த கொடி கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கம்பத்துக்கான தேசிய கொடி வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றும் வகையில் தயாராகி வருகிறது.

Next Story