இருளில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை மேம்பால பகுதிகள்


இருளில் மூழ்கிய தேசிய நெடுஞ்சாலை மேம்பால பகுதிகள்
x
வேலூர்

வேலூர் நகரின் வழியாக சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையின் பல இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு அதன் கீழ்பகுதியில் வாகனங்கள் இயங்கி வருகிறது. அதன்படி கலெக்டர் அலுவலகம் அருகே, காந்திநகர், வள்ளலார் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பாதைகள் வழியாக ஏராளமான வாகனங்கள் செல்கிறது.

இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த மின்விளக்குகளில் சில விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை என்று வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

மின்விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து கிடப்பதாகவும் விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேம்பால பகுதிகளில் மின்விளக்கை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story