தேசிய ஜூனியர் ஆண்கள் ஹேண்ட்பால் போட்டி


தேசிய ஜூனியர் ஆண்கள் ஹேண்ட்பால் போட்டி
x

தேசிய ஜூனியர் ஆண்கள் ஹேண்ட்பால் போட்டி நடைபெற்றது.

திருச்சி

44-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹேண்ட்பால் போட்டி திருச்சி கே.கே.நகரில் உள்ள ஒரு பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு, தெலுங்கானா, சண்டிகார், பஞ்சாப், பீகார், மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 30 அணிகள் பங்கேற்றுள்ளன. 5 நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-புதுச்சேரி அணிகள் மோதின. தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய புதுச்சேரி அணி 25-10 என்ற புள்ளிக்கணக்கில் தமிழக அணியை தோற்கடித்தது. மற்ற ஆட்டங்களில் டெல்லி, மத்தியபிரதேசம், தெலுங்கானா, பஞ்சாப், உத்தரபிரதேசம், இமாசலபிரதேசம், அரியானா, உத்தரகாண்ட், கேரளா, மராட்டியம், ஜம்மு-காஷ்மீர், ராஜஸ்தான் மற்றும் மும்பை ஹேண்ட்பால் அகாடமி அணிகள் வெற்றி பெற்றன.


Next Story