தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்
தூத்துக்குடி:
தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை, 2022-ம் ஆண்டு இயந்திரவியல் பொறியாளர்கள் சங்கம் சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்குக்கு அண்ணா பல்கலைக்கழக கல்லூரி மதுரை மண்டல முதல்வர் லிங்கதுரை தலைமை தாங்கினார். கருத்தரங்கில் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தல், பொறியியல் வினாடி, வினா நிகழ்ச்சிகள் நடந்தன.
கருத்தரங்களில் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மற்றும் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்க ஏற்பாடுகளை தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. பொறியில் கல்லூரி முதல்வர் பட்டர் தேவதாஸ், இயந்திரவியல் துறை தலைவர் மலைராஜன், இயந்திர பொறியாளர் சங்க பிரதிநிதிகள் நவன், அன்டனி ஸ்டென்யோ, மணிகண்டன் மற்றும் பொறுப்பாளர்கள் கார்த்திகேயன், ராஜ்குமார், உதவி பேராசிரியர்கள், மாணவர்கள் செய்து இருந்தனர்.