தேசிய அளவிலான கைப்பந்து போட்டி; நாளை மறுநாள் தொடங்குகிறது


தேசிய அளவிலான கைப்பந்து போட்டி; நாளை மறுநாள் தொடங்குகிறது
x

தேசிய அளவிலான கைப்பந்து போட்டி; நாளை மறுநாள் தொடங்குகிறது

புதுக்கோட்டை

வடகாட்டில் அண்ணா கைப்பந்து கழகத்தின் பொன்விழாவை முன்னிட்டு தேசிய அளவிலான கைப்பந்து போட்டி வடகாடு போலீஸ் நிலையம் அருகேயுள்ள மைதானத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10-ந் தேதி வரை 3 நாட்கள் இரவு நேரத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவாக அணிகள் கலந்துகொள்ள உள்ளன. அதில், ஆண்கள் பிரிவில் கேரளா காவல் துறை, சென்னை எஸ்.ஆர்.எம்., சென்னை ஜி.எஸ்.டி., பெங்களூர் அணி ஆகிய அணிகள் கலந்துகொள்ள உள்ளன. பெண்கள் பிரிவில் கேரளா கே.எஸ். இ.பி அணி, கேரளா காவல் துறை, சென்னை எஸ்.ஆர்.எம்., சென்னை ஐ.சி.எப் ஆகிய அணிகள் கலந்துகொள்ள உள்ளன. போட்டியில் ஒரே நேரத்தில் சுமார் 3 ஆயிரத்து 500 பேர் அமரும் வகையில் கேலரி அமைக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை அண்ணா கைப்பந்து கழகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story