தேசியநூலக வாரவிழா
தேசியநூலக வாரவிழா நடைபெற்றது.
சிவகங்கை கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகத்தில் 55-வது தேசியநூலக வாரவிழா மாவட்டநூலக அலுவலர் ஜான்சாமுவேல் தலைமையில் நடைபெற்றது. கண்காணிப்பாளர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். நூலகர் தவமணி வரவேற்று பேசினார். வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பில் தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன் மற்றும் பகீரதநாச்சியப்பன் பேசினார்கள்.
இந்திய வரலாற்றை தெரிந்து கொள்வோம் என்ற தலைப்பில் மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுந்தரராஜன் பேசினார். நிகழ்சசியில் "வைரநிலம்" என்ற நூலை ஹேமா மாலினி அறிமுகப்படுத்தி பேசினார். எழுத்தாளர் அ.ஈஸ்வரன் ஏற்பாட்டில் நூலகத்தை பயன்படுத்தி பயன் பெரும் விதமாக 50 மாணவ, மாணவிகளுக்கு நூலக அடையாள அட்டை வழங்கப்பட்டது. விழாவில் நூல் சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன், நூலகர் சாந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில்ஆய்வாளர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.