தேசிய நூலக வார விழா


தேசிய நூலக வார விழா
x
தினத்தந்தி 22 Nov 2022 12:15 AM IST (Updated: 22 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேசிய நூலக வார விழா

நீலகிரி

அரவேனு

கோத்தகிரி அருகே அரவேனு கிளை நூலகம் சார்பில் 55-வது தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது. அரவேனு அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு வாசகர் வட்ட தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார். நீலகிரி மாவட்ட நூலக ஆய்வாளர் வசந்தா மல்லிகா, மாவட்ட நூலக இருப்பு சரிபார்ப்பு அலுவலர் கண்ணாகன், ஊராட்சி தலைவர் சுமதி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் வாசகர் வட்ட தலைவர் ராஜ்குமார் அனைவரையும் வரவேற்றார். நூலகர் மனோகரன் அறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் சுனில் கோயல் மற்றும் சங்கரன் ஆகியோர் நூலக தந்தை எஸ்.ஆர்.ரங்கநாதன் உருவப்படத்தை திறந்து வைத்தனர். தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலை, இலக்கிய போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றிப் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரவேனு சுற்று வட்டார பகுதி பொதுமக்கள், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், வாசகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் முன்னாள் வாசகர் வட்டத் தலைவர் ஜெயசீலன் நன்றி கூறினார்.


Next Story