அரசு பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து விழா


அரசு பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து விழா
x

பூண்டி அரசு பள்ளியில் தேசிய ஊட்டச்சத்து விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் அருகே பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடந்தது. விழாவிற்கு சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியன், தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சின்னசேலம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நிரஞ்சனா வரவேற்றார். நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் மதியழகன் கலந்து கொண்டு ஆரோக்கிய நல வாழ்விற்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்கள் குறித்து விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

விழாவில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெயசீலன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அங்கன்வாடி மைய ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேற்பார்வையாளர் சாந்தி நன்றி கூறினார்.


Next Story