தேசிய ஊட்டச்சத்து மாத விழா


தேசிய ஊட்டச்சத்து மாத விழா
x

திருவாடானையில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா திருவெற்றியூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பொது சுகாதாரத்துறை மற்றும் வேர்ல்ட் விஷன் இந்தியா ஆகியவை இணைந்து தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை கொண்டாடியது. நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வைதேகி தலைமை தாங்கினார். திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மலைராஜன், சந்திரமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் வேர்ல்டு விஷன் இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திர எபநேசர் வரவேற்றார். விழாவில் ராமநாதபுரம் மாவட்ட குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் விசுபாவதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் திருவாடானை குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் கலா, சமூக நல வட்டார விரிவாக்க அலுவலர் மெர்சி, திருவெற்றியூர் ஊராட்சி மன்ற தலைவர் கலா முத்தழகு, திருவாடானை வட்டாரத்தைச் சேர்ந்த பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், ஊட்டச்சத்து திட்ட பணியாளர்கள், வளரிளம் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனையொட்டி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து குறித்த கலை நிகழ்ச்சிகள் பேச்சு, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.


Related Tags :
Next Story