நாசரேத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா


நாசரேத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா
x
தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாசரேத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

நாசரேத்:

சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பாக ஆழ்வார்திருநகரி வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகம் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் நடைபெற்றது. விழாவிற்கு ஆழ்வார்திருநகரி ஊராட்சி யூனியன் தலைவர் ஜனஹர் தலைமை தாங்கினார். குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் சுருதி வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு). குளோரியம் அருள்ராஜ் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் குறித்துப் பேசினார். டாக்டர். வீரேஷ் இரத்த சோகை குறித்து விழிப்புணர்வு அளித்தார். வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் பாதுகாப்பான உணவு முறைகள் குறித்து பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பாலசுப்பிரமணியம் ஊட்டத்சத்து நடைமுறைகள் குறித்து பேசினார். விழாவில் ஆழ்வார்திருநகரி அங்கன்வாடி பணியாளர்களின் உணவு கண்காட்சி இடம் பெற்றது. கல்லூரி மாணவர்களுக்கு சிறுதானிய உணவு வகையில் சமையல் போட்டி மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான வினாடி வினா நடைபெற்றது. ஏராளமான மாணவ மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர். சிறுதானிய சமையல் போட்டியில் தூத்துக்குடி சமையல் வல்லுநர் நித்தியானந்தன் கலந்து கொண்டு வெற்றியாளர்களை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட்டன. கல்லூரி ஆங்கிலத் துறை பேராசிரியர் பியூலா ஹேமலதா நன்றியுரை வழங்கினார்.


Next Story