தேசிய மக்கள் நீதிமன்றம்
அம்பையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
திருநெல்வேலி
அம்பை:
அம்பை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் எனும் லோக் அதாலத் நடைபெற்றது. வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான செந்தில்குமார், குற்றவியல் நடுவர் பல்கலைச் செல்வன் ஆகியோர் தலைமையில் ஒரு அமர்வும், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி குமார், மக்கள் நீதிமன்ற உறுப்பினர் வக்கீல் லெனின் தலைமையில் ஒரு அமர்வும் வழக்குகளை விசாரித்தனர். 121 வழக்குகளுக்கு முடிவு காணப்பட்டு அதன் மூலம் ரூ.46 லட்சத்து 14 ஆயிரத்து 553 வசூல் செய்யப்பட்டது.
இதில் அரசு வழக்கறிஞர்கள் மீனாட்சி நாதன், திருமலை குமார், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ராஜாங்கம், செல்வ அந்தோணி, முத்து விஜயன், வக்கீல்கள் ஜெகன் ஸ்ரீநாத், காசிம், செந்தில்குமார், ராஜு, ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story