தேசிய திறனாய்வு தேர்வு: குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாவட்ட அளவில் முதலிடம்


தேசிய திறனாய்வு தேர்வு: குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாவட்ட அளவில் முதலிடம்
x

தேசிய திறனாய்வு தேர்வில் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது.

கரூர்

2021-22-ம் கல்வி ஆண்டிற்கான தேசிய திறனாய்வு தேர்வு எனப்படும் என்.எம்.எம்.எஸ். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 36 மாணவிகள் தேர்வு எழுதியிருந்தனர். இதில் 10 மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வில் கரூர் மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்ற மாணவிகளில் குளித்தலை அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று மாவட்ட அளவில் பள்ளிக்கு முதலிடம் கிடைக்க காரணமாக இருந்த மற்றும் பெருமை தேடித்தந்த மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியை மஞ்சுளா மற்றும் ஆசிரியைகள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் மாணவிகளுக்கு பேனா போன்ற பரிசுகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டன.


Next Story