ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு


ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
x

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.

புதுக்கோட்டை

காரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், மத்தியபிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் அபிஷேக் ஜெயின்லால், கேரள மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் எலிஸபெத் மெய்லி ஆகியோரை கொண்ட தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மருத்துவமனை சுகாதாரம், மருந்து கையிருப்பு, நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள், மகப்பேறு சிகிச்சை, ஓராண்டாக சிகிச்சை பெற்ற உள் நோயாளிகள் விவரம், மருத்துவர், செவிலியர் எண்ணிக்கை, மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின்போது புதுக்கோட்டை சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராம் கணேஷ், வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ேதசிய தர மதிப்பீடு சான்று பெறும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்கீடு, கட்டமைப்பு மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பயன்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story