தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் முற்றுகை


தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் முற்றுகை
x

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை, தேசிய ஊரக உறுதித்திட்ட பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் கிழக்கு மீனாட்சிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் தங்களுக்கு வேலை மறுக்கப்படுவதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். மேலும் தங்களுக்கு வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதைத்தொடர்ந்து பேசிய வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணியாற்றுபவர்களின் ஆதார் அட்டை விவரங்களில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் அவர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறாது.

எனவே ஆதார் விவரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் பதிவேற்றம் செய்தால் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதில் சமாதானமடைந்த பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story