தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில்குறைகளை தீர்ப்பதற்கு அலுவலர் நியமனம்:கலெக்டர்


தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில்குறைகளை தீர்ப்பதற்கு அலுவலர் நியமனம்:கலெக்டர்
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறைகளை தீர்ப்பதற்கு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27-வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், சட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் குறை தீர்ப்பாளராக பூ.சேவகப்பாண்டி என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

எனவே பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் குறைதீர்ப்பாளரின் செல்போன் எண்: 89258 11330 மற்றும் மின்னஞ்சல் முகவரி ombudsman.tut@gmail.com ஆகியவற்றில் புகார்களை தெரிவிக்கலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story