தேசிய ஊரக திட்ட குழுவினர் ஆய்வு


தேசிய ஊரக திட்ட குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 1 Sept 2023 5:15 AM IST (Updated: 1 Sept 2023 5:15 AM IST)
t-max-icont-min-icon

பழனி பகுதியில் தேசிய ஊரக திட்ட குழுவினர் ஆய்வு நடத்தினர்.

திண்டுக்கல்

நாடு முழுவதும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நீர்நிலைகள் புனரமைப்பு, அரசு கட்டிடங்களை பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஊரக பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என பலரும் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது.

இந்நிலையில் தமிழகத்தில் நடைபெறும் தேசிய ஊரக திட்ட பணிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, வத்தலக்குண்டு, கொடைக்கானல் ஊரக பகுதிகளில் இந்த குழுவினர் பார்வையிட்டு வருகின்றனர்.

அந்தவகையில், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட மத்திய குழுவினர் நேற்று பழனி அருகே உள்ள அ.கலையம்புத்தூர், ஆண்டிப்பட்டி ஊராட்சி பகுதிகளில் நடந்த திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் வரும் காலங்களில் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்து ஊராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இது தொடர்பான அறிக்கை மத்திய அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.


Related Tags :
Next Story