ஆதித்தனார் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்


ஆதித்தனார் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுநிலை வேதியியல் துறை சார்பில் "சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள்" என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். முதுநிலை வேதியியல் துறை தலைவர் கோகிலா வரவேற்றார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை இணை பேராசிரியர் எஸ்.சபியா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு "செம்பை உயிரியல் வாழ்க்கையோடு இணைத்தல்" என்ற தலைப்பில் பேசினார். திருவனந்தபுரம் மார் இவானியோஸ் கல்லூரியின் பேராசிரியர் ஆர்.செல்வின் ஜோசிபல் "விசிபில் லைட் ட்ரைவன் டைட்டானியா பேஸ்டு நானோ காம்போசைட் சிஸ்டம் பார் என்விரான்மென்ட்ஸ் அப்ளிகேஷன்ஸ்" என்ற தலைப்பில் பேசினார். பேராசிரியர் கோகிலா கருத்தரங்க ஒருங்கிணைப்பாளராகவும், பேராசிரியர்கள் ஆல்வின் ஜெயதுரை, மூகாம்பிகை ஆகியோர் கருத்தரங்க அமைப்பாளராகவும் செயல்பட்டனர்.

கருத்தரங்கில் ஆதித்தனார் கல்லூரி, கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் அந்தோணி முத்துபிரபு, ஆய்வக உதவியாளர் ஐகோர்ட் மகாராணி மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.


Next Story