தேசிய விளையாட்டு தினம்


தேசிய விளையாட்டு தினம்
x

தேசிய விளையாட்டு தினம் கல்லூரியில் நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரி உடற்கல்வித்துறை சார்பில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றன. மாணவர்களுக்கு 200 மீ, 800 மீ, 1,500 மீ ஓட்டப்பந்தயம், 110 மீ தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல். வட்டு எரிதல் மற்றும் தொடர் ஓட்டப் போட்டிகள் நடைபெற்றன. மாணவிகளுக்கு 100 மீ, 200 மீ, 400 மீ, 1,500 மீ ஓட்டப்பந்தயமும், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் மற்றும் தொடர் ஓட்டப் போட்டிகளும் நடைபெற்றன. இப்போட்டியில் சிவகாசி, அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர் ஆகிய பகுதிகளில் இருந்து 45 பள்ளிகளை சார்ந்த 400 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் உடற்கல்வித்துறைத்தலைவர் சுரேஷ்பாபு வரவேற்றார். துறைப்பேராசிரியர் ஜான்சன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அசோக் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள், தனி நபர் பரிசுகளையும் வழங்கினர். சிறப்பு விருந்தினராக விருதுநகா மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜாஹிர் உசேன் கலந்துக் கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார். முடிவில் உடற்கல்விதுறை பேராசிரியர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.

போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் அசோக், உடற்கல்வித்துறை தலைவர்கள் சுரேஷ்பாபு, ஜான்சன் மற்றும் துறைப்பேராசிரியர்கள் செய்திருந்தனர்.


Next Story