தேசிய மாணவர் படையினர் தூய்மை பணி


தேசிய மாணவர் படையினர் தூய்மை பணி
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேசிய மாணவர் படையினர் தூய்மை பணி

நீலகிரி

ஊட்டி

குன்னூர் அருகே ஜெகதளா பகுதியில் நீரோடையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இந்த பணியில் எம்.ஆர்.சி. முகாமை சேர்ந்த ராணுவ வீரர்கள், தேசிய மாணவர் படையினர் ஈடுபட்டனர். புனித சாகர் அபியான் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த இந்த பணியின்போது, 3 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து அவை மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து தேசிய மாணவர் படையினருக்கு, ராணுவ அதிகாரிகள் விளக்கி பேசினர். மேலும் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


Next Story