தேசிய மாணவர் படை எழுத்து தேர்வு


தேசிய மாணவர் படை எழுத்து தேர்வு
x

பாளையங்கோட்டையில் தேசிய மாணவர் படை எழுத்து தேர்வு நடைபெற்றது.

திருநெல்வேலி

தேசிய மாணவர் படையினருக்கு "பி" சான்றிதழ் தேர்வு பாளையங்கோட்டையில் உள்ள கல்லூரிகளில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு தேசிய மாணவர் படை அதிகாரிகள் கர்னல் சோலாங்கி மற்றும் கர்னல் அன்சாரி ஆகியோர் தேர்வு பொறுப்பாளர்களாக செயல் பட்டனர். இத்தேர்வில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 450 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். மேப் ரீடிங், தகவல் தொடர்பு, ராணுவ தளவாட பயிற்சி போன்றவற்றில் பல்வேறு மதிப்பீடுகள் செய்யப்பட்டு மதிப்பெண் அளிக்கப்பட்டது.


Next Story