தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட முகாம்


தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட முகாம்
x

சேரன்மாதேவி அருகே தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட முகாம் நடந்தது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

தமிழக அரசு சார்பில் மக்களை தேடி மருத்துவம் மூலம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் முகாம் மூலச்சி ஊராட்சியில் நடைபெற்றது. சேரன்மாதேவி யூனியன் சேர்மன் பூங்கோதை குமார் மற்றும் மூலச்சி கிராம பஞ்சாயத்து தலைவர் சமுத்திரக்கனி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் ஜான்சன், சுகாதார பார்வையாளர் சுகன்யா, ஆய்வக மேற்பார்வையாளர் சிவரஞ்சினி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் காசநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.


Next Story