கலெக்டர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி மற்றும் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா உறுதிமொழியை வாசிக்க, அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திரும்பக்கூறி உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், ஹரிஹரன், தனித்துணை கலெக்டர் கோவிந்தன், கலால் உதவி ஆணையர் பானு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ஜெயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story