தேசிய ஒற்றுமை தின ஓட்டம்
தென்காசியில் தேசிய ஒற்றுமை தின ஓட்டம் நடந்தது.
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தென்காசி மாவட்ட கிளை, மாவட்ட நிர்வாகம் இணைந்து தென்காசியில் நேற்று தேசிய ஒற்றுமை தின ஓட்டத்தை நடத்தின. தென்காசி பழைய நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ரெட்கிராஸ் மாவட்ட கிளையின் துணை தலைவர் ஹரிஹர சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கருப்பையா, தென்காசி தாசில்தார் ஆதிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாக கமிட்டி உறுப்பினர் சந்திர சேகர் வரவேற்றார். இந்த ஒற்றுமை தின ஓட்டத்தை தென்காசி உதவி கலெக்டர் கங்கா தேவி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாக அலுவலர் மணிகண்டன் மாரியப்பன், திட்ட அலுவலர் செந்தில் குமார் மற்றும் கல்லூரி மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.