நாட்டு நலப்பணித் திட்ட நிறைவு விழா


நாட்டு நலப்பணித் திட்ட நிறைவு விழா
x

அத்தியூரில் நாட்டு நலப்பணித் திட்ட நிறைவு விழா நடந்தது

வேலூர்

அடுக்கம்பாறை

வேலூர் மாவட்டம், ஊசூர் அடுத்த அத்தியூரில் ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் வேலூர் சி.எம்.சி. செவிலிய கல்லூரி இனைந்து நாட்டு நலப்பணித் திட்ட முகாம் கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது.

இதன் நிறைவு நாளான இன்று நடந்த விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். வேலூர் சி.எம்.சி. செவிலிய கல்லூரி முதல்வர் வத்சலாசதன், செவிலிய கண்காணிப்பாளர் பாலாசீதாராமன், ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயகுமாரிகண்ணன், கவிதாசிவகுமார், விஜயலட்சுமிமுரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

. ஊராட்சி செயலாளர் நாராயணனசெங்குட்டுவன் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் ஒன்றிய குழு தலைவர் அமுதாஞானசேகரன், மாவட்ட கவுன்சிலர் பாபு, ஒன்றிய குழு துணை தலைவர் மகேஸ்வரிகாசி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தொடர்ந்து நாட்டு நலப்பணி திட்ட மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வின்சென்ட்ரமேஷ்பாபு, ராஜன்பாபு, ஒன்றிய கவுன்சிலர் ஜீவாசேட்டு, ஊராட்சி துணை தலைவர் ஜெய்சங்கர், கிராம நிர்வாக அலுவலர் சங்கர்தயாளன், செவிலிய கல்லூரி ஆசிரியர் ஜுலியஸ்ஜான்சாம்யுல், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மீனாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story