நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
பிரதாபராமபுரத்தில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
வேளாங்கண்ணி:
விழுந்தமாவடி அரசு மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் சாந்தி தலைமை தாங்கினார். திருப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த், ஊராட்சிமன்றத் தலைவர் சிவராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 25 பேர் கலந்து கொண்டு பிரதாபராமபுரம் மற்றும் செருதூர் மீனவர்கள் பகுதி, கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் பிரதாபராமபுரத்தில் புயல் பாதுகாப்பு கட்டிட பகுதி, சிவன் கோவில் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணி செய்தனர். முன்னதாக திட்ட அலுவலர் அமுதபாஸ்கரன் வயவேற்றார். இதில் கீழையூர் ஒன்றியக்குழுத்தலைவர் செல்வராணி ஞானசேகரன், மாவட்ட கவுன்சிலர் கவுசல்யா, விழுந்தமாவடி ஊராட்சி மன்றத்தலைவர் மகாலிங்கம், நாகை மாவட்ட நாட்டுநலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் ரவி, உதவி திட்ட அலுவலர் தனசேகரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் உதவி திட்ட அலுவலர் பூபதி நன்றி கூறினார். இந்த முகாம் கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி இன்று(புதன்கிழமை) வரை நடைபெறுகிறது.