தேசிய இளைஞர் தின விழா சைக்கிள் பேரணி


தேசிய இளைஞர் தின விழா சைக்கிள் பேரணி
x
தினத்தந்தி 14 Jan 2023 12:15 AM IST (Updated: 14 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குருவிகுளம் பள்ளி என்.எஸ்.எஸ். மாணவர்கள் தேசிய இளைஞர் தின விழா சைக்கிள் பேரணி நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

குருவிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி என். எஸ். எஸ். மாணவர்கள் தேசிய இளைஞர் தின விழாவை யொட்டி, உலக அமைதி, மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமையை வலியுறுத்தி திட்ட அதிகாரி சுப்புராஜ் தலைமையில் சைக்கிள் பேரணி நடத்தினா். பேரணியை வரலாற்று ஆசிரியர் ஸ்டீபன் அப்பாத்துரை தொடங்கி வைத்தார்.

பேரணி ஆலங்குளம், கழுகுமலை வரை சென்று கழுகாசல மூர்த்தி கோவிலில் கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர். பின்னர் பேரணி குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.


Next Story