திரவ வடிவில் இயற்கை உரங்கள் விற்கப்படும்


திரவ வடிவில் இயற்கை உரங்கள் விற்கப்படும்
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மூலம் திரவ வடிவில் இயற்கை உரங்கள் விற்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசினார்.

நீலகிரி

ஊட்டி

தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மூலம் திரவ வடிவில் இயற்கை உரங்கள் விற்கப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். தொடர்ந்து விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்பட்டது. அதில் 67 கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு, உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது. கூட்டத்தில் நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

தோட்டக்கலைத்துறை மூலம் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் தேனீ பெட்டிகள் கூடுதலாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊட்டி உழவர் சந்தையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மூலிகை மற்றும் அலங்கார செடிகள் விற்பனை செய்வதை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மூலம் இயற்கை உரங்கள் திரவ வடிவில் அதிகளவில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கேள்விகளுக்கு பதில்

பின்னர் காப்பீட்டு நிறுவனத்திற்கு பயிர் சேதம் குறித்து எவ்வாறு தெரிவிப்பது போன்ற விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. மேலும் விவசாயிகளின் பொது கோரிக்கைகளும் விவாதிக்கப்பட்டு, உரிய விவரம் தெரிவிக்கப்பட்டது. இதில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் மோனிகா ராணா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தனபிரியா, தோட்டக்கலை இணை இயக்குனர்(பொ) ஷிபிலா மேரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story