இயற்கை உணவு திருவிழா


இயற்கை உணவு திருவிழா
x
தினத்தந்தி 28 March 2023 6:45 PM GMT (Updated: 28 March 2023 6:46 PM GMT)

அரசினர் மகளிர் கல்லூரியில் இயற்கை உணவு திருவிழா நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி மாணவர் தன்னார்வ அமைப்பின் சார்பாக "இயற்கை உணவுத் திருவிழா" நடந்தது. விழாவுக்கு, கல்லூரி முதல்வர் அறவாழி தலைமை தாங்கினார். கணினி அறிவியல் துறைத்தலைவர் மங்கையர்க்கரசி வாழ்த்தி பேசினார். முன்னதாக தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம் வரவேற்றார். இதில் இயற்கை உணவுகள், பச்சை காய்கள், கூழ்வகைகள்,சிறுதானிய உணவுகள் நீர்மோர், சுக்குமல்லி டீ உள்ளிட்ட 24 வகை உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு பேராசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் வழங்கப்பட்டது. முடிவில் தன்னார்வ அமைப்பின் செயலாளர் வைஷ்ணவி நன்றி கூறினார்.


Next Story