நாட்டியாஞ்சலி விழா


நாட்டியாஞ்சலி விழா
x

நாட்டியாஞ்சலி விழா

தஞ்சாவூர்

பாபநாசம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. பாபநாசம் இறைபணி மன்ற செயலாளர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். திருப்பாலைத்துறை ஆன்மிக பேரவை தலைவர் வரவேற்று பேசினார். இதில் பாபநாசம் பேரூராட்சி மன்ற தலைவர் பூங்குழலி கபிலன் கலந்துகொண்டு பன்னிரு திருமுறை விண்ணப்பம் மற்றும் பரதநாட்டிய நாட்டியாஞ்சலியை தொடங்கி வைத்தார். இதில் பாபநாசம் பேரூர் தி.மு.க. செயலாளர் கபிலன், பேரூர் தி.மு.க. பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர் புஷ்பா சக்திவேல் மற்றும் ஆன்மிக பேரவை செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். நாட்டியாஞ்சலி விழாவில் தஞ்சை, தும்கூர் , சென்னை, திருநாகேஸ்வரம், திருவனந்தபுரம் ஆகிய குழுவினர்கள் அடங்கிய மாணவிகளின் பரதநாட்டியம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பரதநாட்டிய நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். முடிவில் திருப்பாலைத்துறை ஆன்மிக பேரவை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story