தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஊர்வலம்
தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஊர்வலம் சென்றனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்ட தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது. இதில் காமராசர் திடலில் இருந்து சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமிழ்மணி தலைமையில் தலைவர் சக்திவேல், பொருளாளர் பழனிவேல் மற்றும் பணியாளர்கள் ஊர்வலமாக சத்திரம், எம்.பி. கோவில் தெரு, தேரடி, பஸ் நிலையம் வழியாக கலெக்டர் அலுவலகம் வந்தனர். இதையடுத்து, நிதி நெருக்கடியை சரி செய்ய வேண்டும். புதிய ஊதியம் வழங்க வேண்டும். கேரள மாநிலத்தில் வழங்குவதுபோல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டர் ரமண சரஸ்வதியிடம் வழங்கினார்கள்.
Related Tags :
Next Story