வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடம் திறப்பு
வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்தது
மயிலாடுதுறை
குத்தாலம் அருகே பாலையூர் கிராமத்தில் வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு மயிலாடுதுறை வேளாண்மை இணை இயக்குனர் சேகர் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் வெற்றிவேலன், பாலையூர் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராஜா, ஒன்றியக்குழு உறுப்பினர் செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், குத்தாலம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராஜா, ஒன்றியக்குழு துணைத்தலைவர் முருகப்பா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விஜயாராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் துணை வேளாண்மை அலுவலர் ராஜன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story