படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது.


படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது.
x

படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது.

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கி உள்ளது. இதனையொட்டி வருகிற 5-ந் தேதி வரை தினமும் காலை மாலை லட்சார்ச்சனை பூஜை நடக்கிறது. இதனையொட்டி உற்சவ அம்மன் மகாமண்டத்தில் எழுந்தருள செய்து கொலு வைக்கப்பட்டுள்ளது.. முதல் நாளான நேற்று பார்வதி அலங்காரம் செய்து லலிதா சகஸ்ரநாமத்துடன் லட்சார்ச்சனை, குங்கும அர்ச்சனை நடைபெற்றது.

27-ந் தேதி காமாட்சி அலங்காரம், 28-ந் ேததி மாவடி சேவை அலங்காரம், 29-ந் ்தேதி மீனாட்சி அலங்காரம், 3-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரம், 1-ந் தேதி துர்க்கை அலங்காரம், 2-ந் தேதி அன்னபூரணி அலங்காரம், 3-ந் தேதி தனலட்சுமி அலங்காரம், 4-ந் தேதி சரஸ்வதி அலங்காரம், 5-ந் ்தேதி திருஅவதார அலங்காரம் செய்யப்படுகிறது.

5-ந் தேதி இரவு 8.30 மணி அளவில் பாரிவேட்டை உற்சவம், திருவீதி உலா நடக்கிறது. இந்த லட்சார்ச்சனை பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் ரூ.150 செலுத்தி கலந்து கொள்ளலாம். பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் லட்சார்சனை பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.

ஏற்பாடுகளை திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் க.பெ.அசோக்குமார் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி ,செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story