நவராத்திரி இன்னிசை விழா


நவராத்திரி இன்னிசை விழா
x

நெமிலி ஸ்ரீபாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா 26-ந் தேதி தொடங்குகிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஸ்ரீபாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. இதனை சீர்காழி சிவசிதம்பரம் தலைமை தாங்கி ெதாடங்கி வைக்கிறார். பாலா பீடாதிபதி கவிஞர் நெமிலி எழில்மணி முன்னிலை வகிக்கிறார். நவராத்திரி விழா அடுத்த மாதம் 5-ந்தேதி வரை நடைபெறுகிறது.

நவராத்திரி இன்னிசை விழாவில் கலைமாமணி திருவாரூர் பக்தவச்சலம், மேண்டலின் ராஜேஷ், கலைமாமணி திருவாரூர் வைத்தியநாதன், முகர்சிங் பாலசந்தர், பாடகிகள் சென்னை சியாமளா வினோத், சேலம் ஜெயலட்சுமி, சுசித்ரா, சுதா ஆனந்த் ஆகியோரும், இசையமைப்பாளர்கள் எம்.ரஜினி ஆர்.கே. சுந்தர் மற்றும் ஏ.ஆர்.சங்கர் ஆகியோர் பங்கு பெறுகிறார்கள்.

மேலும் திரைப்பட இயக்குனர்கள் வசந்த், சந்தானபாரதி, சீனு ராமசாமி, நடிகர்கள் டெல்லிகணேஷ், எம்.எஸ்.பாஸ்கர் கலந்து கொள்கின்றனர். சென்னை சிவானந்த குருகுலம் பாடகி மகதி நாட்டிய குழுவினர், விக்னேஷ் பாலா குழுவினர் மற்றும் நெமிலி பாலா பீடக் குழந்தைகளின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கவிஞர் நெமிலி எழில் மணி எழுதிய அன்னை பாலா அற்புதங்கள் நூலை சென்னை வானதி பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள்.

அன்னை பாலா அழகு தமிழ் லட்சார்ச்சனை, ஸ்ரீபாலா குடும்ப விருத்தி பூஜை, அன்னை பாலா ஆத்மீக ஒளி வழிபாடு, மற்றும் ஸ்ரீ பாலா பாராயணம் ஹோமம் ஆகியவற்றை குருஜி நெமிலி பாபாஜீ பாலாவும், பாலா பீட நிர்வாகி மோகன்ஜியும் நடத்துகிறார்கள். தினமும் பாலாபீட செயலாளர் முரளிஜி தலைமையில் அன்னதானம் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீபாலா பீட ஆத்மீக குடும்பங்கள் செய்கின்றார்கள். ஆன்மீக அன்பர்கள் திரளாக கலந்து கொண்டு அன்னை பாலாவின் அருளைப் பெறுமாறு பாலா பீட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Next Story