நவராத்திரி கொலு அலங்காரம்


நவராத்திரி கொலு அலங்காரம்
x

கொடைக்கானல் கோடை இன்டர்நேஷனல் ஓட்டலில் நவராத்திரி கொலு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

திண்டுக்கல்

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள கோடை இன்டர்நேஷனல் 3 நட்சத்திர ஓட்டலில் நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. கொலுவில் சாய்பாபா, அன்னை தெரசா, திருவள்ளுவர், விவேகானந்தர் உள்ளிட்ட பல்வேறு பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. அதில் குறிப்பாக நவதானியங்களை கொண்டு உருவாக்கப்பட்ட துர்கா தேவி பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த கொலு பொம்மைகளை ஓட்டலில் தங்கி உள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் பார்த்து ரசித்தனர்.


இந்த ஓட்டல் வளாகத்தில் கடந்த பல ஆண்டுகளாக நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் அலங்காரம் செய்து வருகிறோம் என்று ஓட்டலின் நிர்வாக இயக்குனர் எஸ்.ஜீ.பாண்டுரங்கன் கூறினார்.



Next Story