கோவில்களில் நவராத்திரி சிறப்பு வழிபாடு


கோவில்களில் நவராத்திரி சிறப்பு வழிபாடு
x

கும்பகோணம் பகுதி கோவில்களில் நவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தஞ்சாவூர்

கும்பகோணம் பகுதியில் உள்ள சைவ மற்றும் வைணவ கோவில்களில் நவராத்திரி விழா தொடங்கி நடந்து வருகின்றன. அந்தவகையில் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 24-ந் தேதி கவுரி பூஜையுடன் நவராத்திரி விழா தொடங்கியது. தொடர்ந்து தேவேந்திர பூஜையும் மற்றும் அம்மனுக்கு வெண்ணைத்தாழி, சயன அலங்காரம், மார்க்கண்டேயர் அலங்காரம், சிவலிங்க ஆலிங்க அலங்காரம், ஞானபால் வேணுங்கான அலங்காரம், சிவலிங்க பூஜை அலங்காரம், சரஸ்வதி அலங்காரம் உள்பட பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அம்பு போடுதல் நிகழ்ச்சி

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ததோடு கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கொலு கண்காட்சியையும் பார்வையிட்டனர். விழாவின் கடைசி நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) ஆயுத பூஜையையொட்டி ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. இரவு அம்பு போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதேபோல கும்பகோணத்தில் உள்ள மற்ற சைவ மற்றும் வைணவ கோவில்களிலும் ஆயுத பூஜையையொட்டி இ்ன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. இதேபோல தஞ்சையில் உள்ள பெரியகோவிலில் நவராத்திரி விழா நடந்து வருகிறது. விழாவையொட்டி நேற்று பெரியநாயகி அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.


Next Story