நக்சலைட்டுகளை கிராம நிர்வாக அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்
நக்சலைட்டுகளை கிராமநிர்வாக அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்று பயிற்சி வகுப்பில் வலியுறுத்தப்பட்டது.
நக்சலைட்டுகளை கிராமநிர்வாக அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்று பயிற்சி வகுப்பில் வலியுறுத்தப்பட்டது.
வருவாய்த்துறையினருக்கு பயிற்சி
நக்சலைட்டுகளை கண்காணித்து கட்டுப்படுத்துதல் மற்றும் முன்னெச்சரிக்கையாக செயல்படுதல் குறித்து அனைத்து வருவாய்த் துறை அலுவலர்களுக்கான பயிற்சி ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.
ஈரோடு சிறப்புப்படையின் போலீஸ் சூப்பிரண்டு முருகன் பயிற்சி அளித்தார். இப்பயிற்சியில் தமிழ்நாட்டில் சிறப்புப்படையின் பணிகள் மற்றும் இடது சாரி தீவிரவாதம் மற்றும் நகர்ப்புற நக்சலைட்டுகள் பரவாமல் தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து, தமிழ்நாடு சிறப்புப் படையினருக்கு வருவாய்த்துறையினர் வழங்க வேண்டிய ஒத்துழைப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
தகவல் தெரிவிக்க வேண்டும்
மேலும் பொதுமக்கள் பிரச்னைகளில் ஈடுபடும் புரட்சி இயக்கங்கள் மற்றும் அதன் உறுப்பினர்களை கண்காணிக்க வேண்டும். இவர்களால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என தெரிய வந்தால், அதுகுறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிரடிப்படை சார்பில் ஒரு காவல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். நகர்ப்புற நக்சலைட்டுகளின் நடவடிக்கைகளை கிராம நிர்வாக அலுவலர்கள் கண்காணித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நக்சலைட்டுகளுக்கு என நியமிக்கப்பட்ட அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது.
இதில், வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், கலெக்டர் அலுவலக மேலாளர் (நீதியியல்) விஜயகுமார். அனைத்து தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.