நாசரேத் திருமறையூர்ஆலய பிரதிஷ்டை பண்டிகை
நாசரேத் திருமறையூர் ஆலய பிரதிஷ்டை பண்டிகை நடந்தது.
தூத்துக்குடி
+
தூத்துக்குடி - நாசரேத் சி.எஸ்.ஐ திருமண்டல திருமறையூர் சேகர மறுரூப ஆலய பிரதிஷ்டை பண்டிகை விழா 5 நாட்கள் நடைபெற்றது. முதல் 2 நாட்கள் நடைபெற்ற கன்வென்ஷன் கூட்டங்களில் தூத்துக்குடியை சேர்ந்த செல்வக்குமார் தேவசெய்தி கொடுத்தார். திருமறையூர் பிரைட் ஆர்கெஸ்ட்ரா குழுவினர் சிறப்பு பாடல்களை பாடினர். 3-வது நாள் காலை 9 மணிக்கு பரிசுத்த திருவிருந்து ஆராதனையும், தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு பண்டிகை ஆராதனையும், மூக்குப்பீறி சேகரகுரு ஞானசிங் எட்வின் தலைமையில் நடைபெற்றது. 4-வது நாள் அதிகாலை 5 மணிக்கு அசனப்பண்டிகை ஆராதனையும் பரிசுத்த திருவிருந்து ஆராதனையும், திருமறையூர் சேகர குருவானவர் ஜாண் சாமுவேல் தலைமையில் நடந்தது. மாலை 4.30 மணிக்கு அசன விழா நடைபெற்றது. 5-ஆம் நாள் இரவு 7 மணிக்கு ஸ்தாபனங்களின் கலைநிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.
Related Tags :
Next Story