நெல்லையில் என்.சி.சி. மாணவர்கள் தேர்வு
டெல்லி சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்க நெல்லையில் என்.சி.சி. மாணவர்கள் தேர்வு நடந்தது.
திருநெல்வேலி
டெல்லியில் நடைபெற உள்ள சுதந்திர தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தகுதி வாய்ந்த என்.சி.சி. மாணவ-மாணவிகள் தேர்வு நெல்லை பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்தது.
ஏற்கனவே கல்லூரி மற்றும் பள்ளி அளவில் தனித்தனியாக மாணவர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள் இணைந்து தேர்வு நேற்று நடந்தது.
ராணுவ அதிகாரி கர்னல் கோபிஜோசப் தலைமையில் இந்த தேர்வு நடந்தது. இதில் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த 100 மாணவ-மாணவிகள் பங்கேற்று அணிவகுப்பு மற்றும் பயிற்சி செய்தனர்.
Related Tags :
Next Story