என்.சி.சி. மாணவர்கள் சைக்கிள் ஊர்வலம்


என்.சி.சி. மாணவர்கள் சைக்கிள் ஊர்வலம்
x

கும்பகோணத்தில் என்.சி.சி. மாணவர்கள் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர்

தஞ்சாவூர்

கும்பகோணம்

கும்பகோணத்தில், 8-வது என்.சி.சி. பட்டாலியன் சார்பில், நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகளின் சைக்கிள் ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மற்றும் அரசினர் கலைக்கல்லூரி என்.சி.சி. மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திலிருந்து தொடங்கிய இந்த சைக்கிள் ஊர்வலம் ஆயிகுளம் சாலை, காந்தி பூங்கா, டாக்டர் பெசன்ட் ரோடு, லட்சுமி விலாஸ் தெரு வழியாக சென்று மீண்டும் பல்கலைக்கழகத்தில் முடிவடைந்தது. இதற்கான ஏற்பாட்டினை 8-வது பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி கர்னல் சந்திரசேகர் அறிவுறுத்தலின்படியும், லெப்டினன்ட் கர்னல் ராஜு ஆலோசனையின்பேரிலும் என்.சி.சி. அதிகாரிகள் கேப்டன் செந்தில்நாதன் மற்றும் லெப்டினன்ட் எட்வர்ட் சாமுவேல் ஆகியோர் செய்திருந்தனர்.






Next Story