அம்மாபேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு


அம்மாபேட்டை அருகே  கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
x

அம்மாபேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

ஈரோடு

அம்மாபேட்டை,

அம்மாபேட்டை அருகே உள்ள பூனாச்சி கத்திரியாங்காட்டைச் சேர்ந்தவர் பத்திரன் (வயது 55). விவசாயி. இவர் தான் வளர்த்து வரும் கால்நடைகளை அருகே உள்ள தோட்டத்தில் மேய்த்து வந்தார். அப்போது, அவரது பசுமாடு 40 அடி ஆழமுள்ள தோட்டத்துக் கிணற்றில் எதிர்பாராமல் தவறி விழுந்தது. கிணற்றில் சுமார் 20 அடிக்கு தண்ணீர் இருந்ததால், பசுமாடு தண்ணீரில் தத்தளித்தது.

இதுகுறித்து, பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு படையினர் அங்கு வந்து கிணற்றுக்குள் இறங்கி பொதுமக்கள் உதவியுடன் பசு மாட்டை மீட்டனர்.


Next Story