அம்மாபேட்டை அருகேதோட்டத்தில் புகுந்த சிறுத்தை நாயை கவ்வி சென்றதுவிவசாயிகள் அச்சம்


அம்மாபேட்டை அருகேதோட்டத்தில் புகுந்த சிறுத்தை நாயை கவ்வி சென்றதுவிவசாயிகள் அச்சம்
x

விவசாயிகள் அச்சம்

ஈரோடு

அம்மாபேட்டை அருகே தோட்டத்தில் புகுந்த சிறுத்தை நாயை கவ்வி சென்றதால் விவசாயிகள் அச்சம் அடைந்தனர்.

நாயை கவ்விய சிறுத்தை

சென்னம்பட்டி வனப்பகுதி அருகே உள்ள அம்மாபேட்டை கோவிலூர் புதுக்காட்டை சேர்ந்தவர் செலம்பணன். விவசாயி. இவர் வனப்பகுதியை ஒட்டியுள்ள தனது தோட்டத்தில் கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

கால்நடைகள் கட்டப்பட்டு இருக்கும் இடத்தில் காவலுக்கு 2 நாய்களும் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு திடீரென நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது. இதனால் செலம்பணன் வெளியே வந்து பார்த்தார். அப்போது வனத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒரு கன்று குட்டியை கடிக்க முயன்றது. அதை பார்த்து 2 நாய்களும் பயங்கரமாக குரைத்து கொண்டு இருந்தன. இதனால் திடீரென கன்று குட்டியை விட்டு விட்டு சிறுத்தை ஒரு நாயின் மீது பாய்ந்து அதை கடித்து கவ்வியபடி ஓடியது.

விவசாயிகள் அச்சம்

சிறுத்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்த செலம்பணன் இதுகுறித்து அக்கம் பக்கத்து விவசாயிகளுக்கு தகவல் அளித்தார். அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த பகுதியில் சிறுத்தையை தேடினார்கள். ஆனால் சிறுத்தையை காணவில்லை. இதுகுறித்து சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் நேற்று காலை சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் கால் தடங்களை ஆய்வு செய்தபோது தோட்டத்துக்கு வந்தது சிறுத்தை என்பது உறுதியானது.

இதையடுத்து, சிறுத்தை நடமாடிய 4 இடங்களில் தானியங்கி கேமிரா பொருத்த முடிவு செய்தார்கள். மேலும் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய தோட்டங்களில் வசிப்போர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சிறுத்தை நடமாட்டம் உறுதியான நிலையில், விவசாயிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.


Next Story