அம்மாபேட்டை அருகே தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை தந்தை கண்டித்ததால் விபரீத முடிவு


அம்மாபேட்டை அருகே  தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை  செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை தந்தை கண்டித்ததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 23 Sep 2022 7:30 PM GMT (Updated: 2022-09-24T01:01:09+05:30)

மாணவி தற்கொலை

ஈரோடு

அம்மாபேட்டை அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை தந்தை கண்டித்ததால் தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கல்லூரி மாணவி

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். கூலித்தொழிலாளி. இவருடைய 2-வது மகள் கீர்த்தனா (வயது 17). இவர் நம்பியூரில் உள்ள அரசு கலை கல்லூரியில் பி.ஏ.முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவா் அங்குள்ள விடுதியில் தங்கி இருந்து படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் கீர்த்தனா இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

செல்போனில்...

நேற்று காலை லட்சுமணன் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு சாப்பிட வந்து உள்ளார். அப்போது வீட்டில் இருந்த கீர்த்தனா செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை கண்டார். உடனே அவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்த கீர்த்தனாவை கண்டித்தார். பின்னர் சாப்பிட்டு விட்டு வேலைக்கு செல்லும்போது செல்போனை கீர்த்தனாவிடம் இருந்து வாங்கிக்கொண்டு சென்றதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த கீர்த்தனா வீட்டில் உள்ள மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டுக்கொண்டார். வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு லட்சுமணன் வந்து உள்ளார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டிக்கிடந்தது. இதனால் அவர் தனது மகள் கீர்த்தனாவை அழைத்தார். ஆனால் சத்தம் இல்லை.

சாவு

இதனால் லட்சுமணன் சந்தேகம் அடைந்து வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார். அப்போது தூக்கில் கீர்த்தனா தொங்கி கொண்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் கீர்த்தனாைவ மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கீர்த்தனா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்