அம்மாபேட்டை அருகே மகன் 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் தந்தை தற்கொலை


அம்மாபேட்டை அருகே  மகன் 10-ம் வகுப்பு தேர்வில்   தோல்வி அடைந்ததால் தந்தை தற்கொலை
x

10-ம் வகுப்பு தேர்வில் தோல்வி

ஈரோடு

அம்மாபேட்டை அருகே 10-ம் வகுப்பு தேர்வில் மகன் தோல்வி அடைந்ததால் விஷம் குடித்து தந்தை தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தேர்வில் தோல்வி

அம்மாபேட்டை அருகே உள்ள கல்பாவி தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் அப்புசாமி (வயது 45). இவர் சொந்தமாக கார் ஓட்டி வந்தார். அவருடைய மனைவி சுமதி (38). இவர் பவானி அருகே உள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார்.

இவர்களுடைய மகன்கள் சஞ்சய் (15), சந்துரு (13). இதில் சஞ்சய் மயிலம்பாடியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் படித்து சமீபத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார். இந்த நிலையில் தேர்வு முடிவும் வெளியானது. இதில் சஞ்சய் 3 பாடங்களில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது.

விஷம் குடித்த தந்தை

இதனால் அவரது தந்தை அப்புசாமி கவலையடைந்தார். எனவே சஞ்சயிடம், மீண்டும் படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெறு எனக்கூறி தனியார் டியூட்டோரியல் கல்லூரியில் சேர்ந்து பணம் செலுத்தியுள்ளார். ஆனால் அவர் வகுப்புக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

இதனால் அப்புசாமி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். கடந்த 1-ந் தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சாவு

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அப்புசாமி நேற்று இறந்தார்.

இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

10-ம் வகுப்பு தேர்வில் மகன் தோல்வி அடைந்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story