அம்மாபேட்டை அருகே அட்டகாசம் செய்த குரங்கு கூண்டில் பிடிபட்டது


அம்மாபேட்டை அருகே அட்டகாசம் செய்த குரங்கு கூண்டில் பிடிபட்டது
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 8:00 AM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டை அருகே அட்டகாசம் செய்த குரங்கு கூண்டில் பிடிபட்டது.

ஈரோடு

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த சில நாட்களாக 2 குரங்குகள் அட்டகாசம் செய்து வந்தன. இதனால் அந்த பகுதியில் விளையாட செல்ல முடியாமல் குழந்தைகள் அச்சப்பட்டனர். இதையடுத்து குரங்குகளை கூண்டுவைத்து பிடிக்கவேண்டும் என வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து குரங்குகளை பிடிப்பதற்காக பள்ளி வளாகத்தில் வனத்துறையினர் கூண்டு அமைத்தனர். அதில் பழங்களை போட்டு வைத்திருந்தனர். இந்த நிலையில் கூண்டுக்குள் இருந்த பழத்தை தின்பதற்காக 2 குரங்குகளும் வந்தன. அப்போது ஒரு குரங்கு மட்டும் கூண்டுக்குள் சிக்கிக்கொண்டது. மற்றொரு குரங்கு தப்பி ஓடிவிட்டது. பள்ளிக்கூடம் நாைள மறுநாள் (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளதால், அதற்குள் தப்பி ஓடிய குரங்கையும் பிடிக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story