அந்தியூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது


அந்தியூர் அருகே  ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
x

அந்தியூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

ஈரோடு

அந்தியூர் அருகே உள்ள மூலக்கடை பஸ் நிறுத்தம் பகுதியில், ஈரோடு குடிமைபொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது 2 ஆயிரத்து 500 கிலோ (2½ டன்) ரேஷன் அரிசி கர்நாடகா மாநிலத்துக்கு கடத்தி செல்வது கண்டு பிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து வாகனத்தில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், அந்தியூர் தவுட்டுப்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (வயது 52), சத்தியமங்கலம் அரசூர் பகுதியை சேர்ந்த ஞானமூர்த்தி (25) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டு உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து 2½ டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story