அந்தியூர் அருகே ஆபத்தான நிலையில் ஆப்பக்கூடல் ஏரிக்கரை தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை


அந்தியூர் அருகே  ஆபத்தான நிலையில் ஆப்பக்கூடல் ஏரிக்கரை  தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை
x

தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை

ஈரோடு

அந்தியூர் அருகே ஆபத்தான நிலையில் ஆப்பக்கூடல் ஏரிக்கரை உள்ளது. எனவே ஏரிக்கரையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆப்பக்கூடல் ஏரி

அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் பகுதியில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கரையின் வழியாக பவானியில் இருந்து அத்தாணி, கோபி மற்றும் சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

மேலும் அந்த பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்பு பாரம் ஏற்றிக்கொண்டு ஆயிரக்கணக்கான லாரிகள் தினமும் சென்று வருகின்றன.

தற்போது ஆப்பக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால் ஆப்பக்கூடல் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியதுடன், ஏரியில் இருந்து உபரிநீரும் வெளியேறி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் ஆப்பக்கூடல் ஏரிக்கரையானது வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ளது.

கோரிக்கை

இந்த நிலையில் ஏரிக்கரையின் ஒரு பகுதியில் உள்ள தடுப்பு சுவர் சரிந்து விழுந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. அதுவும் ஏரிக்கரையின் வளைவான பகுதியில் உள்ள தடுப்பு சுவர் சரிந்து விழுந்து உள்ளதால் வாகன விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே வாகன விபத்து ஏற்பட்டு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன் ஏரிக்கரையில் சரிந்து விழுந்த பகுதியை சீரமைக்க வேண்டும். மேலும் அங்கு தடுப்பு சுவர் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story