அந்தியூர் அருகே குழாய் உடைந்து சாலையில் வீணாக ஓடும் குடிநீர்


அந்தியூர் அருகே குழாய் உடைந்து சாலையில் வீணாக ஓடும் குடிநீர்
x

அந்தியூர் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே உள்ளது வேம்பத்தி ஏரி. இங்கு உள்ள நல்லா மூப்பனூர் பிரிவு பகுதியில் வேம்பத்தி ஊராட்சி சார்பில் நிலத்துக்கு அடியில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களாக அதில் இருந்து தண்ணீர் வெளியேறி வீணாக சாலையில் ஓடுகிறது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாக ஓடுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும்போது மிகவும் சிரமமாக உள்ளது. தண்ணீர் குட்டைபோல் தேங்கி நிற்பதால் பஸ், லாரி போன்றவை வேகமாக செல்லும்போது வாகனங்களின் டயர்களில் தண்ணீர் பட்டு சாலையோரமாக நடந்து செல்வோர் மீது படுகிறது. தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த பகுதி சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்வோர் வழுக்கி விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து தர வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story