அந்தியூர் அருகே ஆபத்தான நிலையில் மின் கம்பம்


அந்தியூர் அருகே ஆபத்தான நிலையில் மின் கம்பம்
x

அந்தியூர் அருகே ஆபத்தான நிலையில் ஒரு மின் கம்பம் உள்ளது.

ஈரோடு

அந்தியூர் அருகே வேம்பத்தி மயான பகுதியில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின் கம்பத்தின் வழியாக உயர் மின் அழுத்த கம்பி செல்கிறது. இந்த நிலையில் அந்த மின் கம்பத்தில் உள்ள காரைகள் பெயர்ந்து அதில் உள்ள கம்பிகள் எலும்புக்கூடு போன்று வெளியில் தெரிகிறது. பலத்த காற்று வீசினால் மின் கம்பம் உடைந்து விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன் அந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story