அந்தியூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த காட்டுப்பன்றிகளை விரட்டியடித்த பொதுமக்கள்


அந்தியூர் அருகே   கிராமத்துக்குள் புகுந்த   காட்டுப்பன்றிகளை விரட்டியடித்த பொதுமக்கள்
x

காட்டுப்பன்றிகளை விரட்டியடித்த பொதுமக்கள்

ஈரோடு

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் ஏராளமான மான், யானை, காட்டுப்பன்றிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் காட்டுப்பன்றிகள் பர்கூர் மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள நகலூர், பெருமாபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வனத்துறை அதிகாரியிடம் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நகலூர் கிராமத்துக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்தன. இதை பார்த்த பொதுமக்கள் பலர் அலறி அடித்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று விட்டனர். ஒரு சிலர் தடியால் அடித்து காட்டுப்பன்றிகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணிநேர போராட்டத்துக்கு பிறகு காட்டுப்பன்றிகள் அங்கிருந்து சென்றன. நகலூர் பகுதியில் பகல் நேரத்திலே காட்டுப்பன்றிகள் ஊருக்குள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story