ஆண்டிப்பட்டி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை: சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்


ஆண்டிப்பட்டி அருகே  தூக்குப்போட்டு பெண் தற்கொலை:   சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே டி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சசிகலா (வயது 33). இந்த தம்பதி்க்கு 2 மகன்கள் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனை சசிகலாவின் தந்தை ராஜேந்திரன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த சசிகலா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஆண்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பி்ன்னர் சசிகலாவின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சசிகலாவின் தந்தை ராஜேந்திரன் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story